25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சிவகாசி மாநகராட்சி - திருத்தங்கல் - கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவகாசி மாநகராட்சி - திருத்தங்கல் - கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி - திருத்தங்கல் கருப்பசாமி கோவில் எதிரே உள்ள பெரியகுளம் கண்மாய்க்கு செல்லும் வழியில், கழிவு நீர் இல்லா மாநகர் - இலக்கு நோக்கிய பயணம்…- என்ற கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில்  (16.05.2025) நடைபெற்றது.

திருத்தங்கல் நகரத்திற்குள் உற்பத்தியாகும் அனைத்து கழிவு நீரும், வாறுகால் வழியாக, பார்ப்பான்குளம் கண்மாயில் கலந்து, அதனுடைய உபரி நீரும், உறிஞ்சிகுளம் கண்மாயில் கலப்பதோடு, ராஜா K.S.P. கணேசன் டிரஸ்டின் நிதி உதவியுடனும், சிவகாசி பசுமை மன்றம் மூலம் தற்போது, தூர்வாரப்பட்டு தூய்மையாக காட்சியளிக்கும் செங்குளம் கண்மாய் உபரி நீரும் உறிஞ்சிகுளம் கண்மாயில் கலக்கிறது. நீர்நிலைகள் அனைத்தும் கழிவு நீரால் சிதலமடைந்து வருவதோடு நிலத்தடி நீரும் தரம் மாறி வருகிறது.

வருங்கால சந்ததியினருக்கு நீர்நிலைகளை மீட்டெடுத்து, சுத்தமான நீர் மற்றும் நிலத்தை வழங்க வேண்டிய, இத்தருணத்தில் மூன்று கண்மாய்களில் கலக்கும் கழிவுநீரை மறு சுழற்சி செய்திட சிவகாசி சுக்கிரவார்பட்டியில் அமைந்துள்ள திருப்பதி பேப்பர் மில்ஸ் நிறுவனத்தின் நிதி உதவியோடு செயல்படுத்திட கடந்த வாரம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு,அதற்கான பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது   என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையாளர், பசுமை மன்ற நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News