25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


துணிவு மற்றும் வீர தீர சாகசச் செயல்புரிந்த மகளிருக்கான ‘கல்பனா சாவ்லா விருது 2025” வழங்கபபடவுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

துணிவு மற்றும் வீர தீர சாகசச் செயல்புரிந்த மகளிருக்கான ‘கல்பனா சாவ்லா விருது 2025” வழங்கபபடவுள்ளது.

 2025 -ஆம் ஆண்டிற்கான சுதந்திர தின விழாவின் போது, தமிழக முதல்வர் அவர்களால், ஏதவாது ஒரு துறையில் துணிவு மற்றும் வீர தீர சாகசச் செயல்புரிந்த மகளிருக்கான ‘கல்பனா சாவ்லா விருது 2025” வழங்கப்பட உள்ளது. விருதுகளுடன் ரூ.5,00,000/- ரொக்கப்பரிசு (ம) சான்றிதழும் வழங்கப்படுகிறது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விதிமுறைகள்
 

 தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

ஏதவாது ஓரு துறையில் துணிவு மற்றும் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும்.


 இவ்விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன் விவரக் குறிப்பு மற்றும் ஆவணங்களுடன் (https://awards.tn.gov.in)  என்ற இணைதள முகவரியில் 16.06.2025 -ற்குள்  விண்ணப்பம் செய்ய வேண்டும்.

 மேற்காணும் விண்ணப்ப விவரங்களை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 20.06.2025-க்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது

          மேலும், தொடர்புக்கு மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட  ஆட்சியர் வளாகம், விருதுநகர் மாவட்டம். 04562-252701 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News