25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வுகளுக்கான (தொகுதி-II மற்றும் தொகுதி -II-A)முதன்மை எழுத்துத் தேர்வு எதிர்வரும் (15.03.2026) அன்று நடைபெற உள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வுகளுக்கான (தொகுதி-II மற்றும் தொகுதி -II-A)முதன்மை எழுத்துத் தேர்வு எதிர்வரும் (15.03.2026) அன்று நடைபெற உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம்  எதிர்வரும் 15.03.2026  அன்று  முற்பகல் மற்றும்  பிற்பகல் ஒருங்கிணைந்த   குடிமைப்பணிகள்  தேர்வு -II  ( தொகுதி -II மற்றும் தொகுதி -II-A) முதன்மை எழுத்துத் தேர்வு - (Main Written Examination)    பதவிக்களுக்கான  போட்டித் தேர்வு விருதுநகர் , கே.வி.எஸ் மேல்நிலைப் பள்ளியில்   (K.V.S HR SEC SCHOOL VIRUDHUNAGAR) நடைபெற உள்ளது. முற்பகல் 229 தேர்வர்கள் மற்றும் பிற்பகல் 232 தேர்வர்கள் மொத்தம் 461 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இது குறித்து விருதுநகர் மாவட்ட  ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் வரும் 15.03.2026 அன்று முற்பகல் மற்றும்  பிற்பகல்  ஒருங்கிணைந்த   குடிமைப்பணிகள்  தேர்வு -II  ( தொகுதி -II மற்றும் தொகுதி -II-A) முதன்மை எழுத்துத் தேர்வு - (Main Written Examination)  நடைபெறவுள்ளது. தேர்வு நடைபெறும் மையத்திற்கு  தேர்வர்கள் முற்பகல் நடைபெறும் தேர்விற்கு காலை  08.30 மணிக்கு தேர்வு கூடத்திற்கு நுழைவுச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைபுரிய அறிவுறுத்தப்படுகிறார்கள்.   தேர்வுக்கான நுழைவுச்சீட்டு  (Hall Ticket) www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு நாள் அன்று ( 15.03.2026) காலை 09.00 மணிக்கு மேல்  தேர்வு கூடத்திற்கு வருகை தரும் தேர்வர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் .

 மேலும்  தேர்வர்கள் 12.30 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். பிற்பகல் நடைபெறும் தேர்விற்கு பிற்பகல்  01.30 மணிக்கு தேர்வு கூடத்திற்கு நுழைவுச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைபுரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். பிற்பகல் 02.00 மணிக்கு மேல்  தேர்வு கூடத்திற்கு வருகை தரும் தேர்வர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் . மேலும்  தேர்வர்கள் பிற்பகல் 05.30 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.   

தேர்வர்கள் கருப்புநிற பந்துமுனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  மேலும் தேர்வர்கள் தேர்வு கூடத்தின் உள்ளே மொபைல் போன், மின்னணு கைக்கடிகாரம் (Electronic Watch ) புளுடூத் (Bluetooth)  போன்ற  மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் தேர்வு கூடங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்து  வசதிகள்  தேர்வு நாளன்று காலை 06.00 மணி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தேர்வர்கள் மேற்குறிப்பிட்ட முக்கிய அறிவுரைகளை பின்பற்றி தேர்வில் வெற்றி பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ சுகபுத்ரா, I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News