மாமரங்களில் நன்றாக பூ எடுத்துள்ளஇந்தாண்டு. அமோகம்தான் மாம்பழ உற்பத்தியாளர்கள் நம்பிக்கை.
மாமரங்களில் இந்தாண்டு பல இடங்களிலும் நன்றாக பூ எடுத்துள்ளது. காலநிலை ஒத்துழைத்தால் இந்தாண்டும் மாம்பழ விளைச்சல் அதிகமாகவே இருக்கும். மார்ச்பாதியில் விளைச்சல் துவங்கும்.
அல்போன்சா, கேசர் உள்ளிட்ட மாம் பழங்களுக்கு தனித்த சுவை, வாசனை, நிறம் ஆகியவற்றால்,வெளி நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள், மாம்பழ ஏற்றுமதிக்கான முக்கிய சந்தையாக உள்ளன. ஐரோப்பிய நாடுகளுடன் தடையற்ற ஒப்பந்தம், அமெரிக்காவின் வரி குறைப்பு ஆகியவற்றால், இந்திய மாம்பழங்கள் இந் தாண்டு கூடுதலாக ஏற்றுமதியாகும்,” என்றனர்.
1.46 லட்சம் ஹெக்டேரில் தமிழகத்தில் மாம்பழ சாகுபடி நடைபெறுகிறது. ஆண்டுக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் டன் மாம்பழங்கள் உற்பத்திசெய்யப்படுகின்றன. இந்தாண்டு பல இடங்களிலும் மாமரங்களில் நன்றாக பூ பூத்துள்ளது. போதுமான விலை கிடை த்தால் .இந்த ஆண்டும் அமோகம்தான். என விவசாய மக்கள் எதிர்பார்க்கின்றனர்
0
Leave a Reply