25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >>


சமுகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  அவர்கள்  இராஜபாளையம் வட்டம் தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சியில்  கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினை திறந்து வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமுகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள்  இராஜபாளையம் வட்டம் தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினை திறந்து வைத்தார்.

 சமுகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள்  (27.06.2026) விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம் தளவாய்புரம் ஊராட்சி மாஞ்சோலை  பிள்ளையார் கோவில் தெருவில் ரூ.4.57 இலட்சம் மதிப்பில்பேவர் பிளாக் கல் அமைக்கும்  பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.பின்னர்,  சமுகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள்  இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2024- 2025 இன் கீழ் ரூ.20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினை திறந்து வைத்து மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.

தமிழ்நாடு அரசு நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராமப்புறங்களுக்கும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை  செயல்படுத்தி  வருகிறது.அந்த வகையில் இராஜபாளையம் வட்டம் தளவாய்புரம் ஊராட்சி மாஞ்சோலை பிள்ளையார் கோவில் தெருவில்    15 ஆவது  நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.4.57 இலட்சம் மதிப்பில் 88 மீட்டர் நீளம், 3.5 மீட்டர் அகலத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தரமாக முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.மேலும், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில்,இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2024-2025 இன் கீழ் ரூ.20 இலட்சம் மதிப்பில்  அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய அங்கன்வாடி  மையத்தில் ஆரம்பள்ளிக்கல்வியில் குழந்தைகளைஈர்க்கும் வகையிலான வண்ணமயமான சுவரோவியங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள், அடிப்படை வசதிகலான பாதுகாப்பான குடிநீர், தடையில்லா மின்சாரம் மற்றும் காற்றோட்டமான கட்டமைப்பு,  ஊட்டச்சத்து உறுதி செய்யும் வகையில் சுகாதாரமான முறையில் சத்துணவு தயாரிப்பதற்கான நவீன சமையலறை வசதி,  சுகாதாரத்தை பேணும் வகையில் குழந்தைகளுக்கான பிரத்யேக கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.இதுபோன்று  அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் தொடர்ச்சியாக செய்து தரப்படும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில்  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.அ.கொ.நாகராஜ பூபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி விஜயலட்சுமி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News