25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


அமைச்சர் அவர்கள், நமக்கு நாமே திட்டம் 2025-2026ன் கீழ்,  கான்கிரீட் சாலையுடன் கூடிய வடிகால் அமைக்கும் பணி மற்றும் TURIP-2025-2026ன் கீழ்,  பேவர் பிளாக் அமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அமைச்சர் அவர்கள், நமக்கு நாமே திட்டம் 2025-2026ன் கீழ், கான்கிரீட் சாலையுடன் கூடிய வடிகால் அமைக்கும் பணி மற்றும் TURIP-2025-2026ன் கீழ், பேவர் பிளாக் அமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சியில் (16.02.2026) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள், நமக்கு நாமே திட்டம் 2025-2026ன் கீழ், ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலையுடன் கூடிய வடிகால் அமைக்கும் பணி மற்றும் Tamil Nadu Urban Road Infrastructure (TURIP) 2025-2026ன் கீழ், ரூ.1.6 கோடி மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

அருப்புக்கோட்டை நகராட்சியில் தற்போது பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளும், தெருக்களில் குடிநீர்க் குழாய்கள் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.இதனால் சாலைகள் மேடும் பள்ளமுமாக மாறி, போக்குவரத்துச் சீராக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, சாலைகளைப் பழுதுநீக்கம் செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ. 21 கோடி நிதி வழங்கியுள்ளார். தற்போது நகராட்சியில் சுமார் 280 இடங்களில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இப்பணிகளை விரைந்து முடித்து, இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அனைத்துச் சாலைகளையும் சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எங்கு எல்லாம் சாலைகள் சேதமடைந்துள்ளதோ, அந்தப் பகுதிகள் அனைத்தும் உடனடியாகச் சரிசெய்யப்படும்.இத்தகைய மக்கள் நலப் பணிகளைச் சிறப்பாகச் செய்ய நிதி வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News