25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்  அவர்கள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பினை முன்னிட்டு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பினை முன்னிட்டு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

 விருதுநகர் மாவட்டம், சிவகாசி நாரணாபுரத்தில்  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில்  கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பினை முன்னிட்டு சீர்வரிசை பொருட்களை (06.10.2026)வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் குழந்தைகளையும், பெண்களையும் தனது இரு கண்களாக பாவித்து பல்வேறு சிறப்பு திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள்.பெண்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை பொருளாதார பற்றாக்குறை  எவ்விதத்திலும் தடை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவும், அவர்களை குறுகிய வட்டத்திற்குள் நிறுத்திடக்கூடாது என்பதற்காக வெற்றிப்பயணத் திட்டத்தினை ஏற்படுத்தி தமிழகம் எங்கும் கட்டணமில்லாமல் பயணம் செய்து தங்களது வாய்ப்புகளை வளர்த்துக்கொள்ள வழியை ஏற்படுத்தி தந்துள்ளார்.

பிறக்கும் குழந்தைகளுக்கு உற்ற துணையாகவும், தாய்மாமனின் அன்பினை கற்றத்தரும் வகையிலும் அரசு மருத்துவமனைகளிலே மகப்பேறு சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தினை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.கர்ப்பிணி தாய்மார்கள் தனியாக இல்லை உங்களுடன் அரசும், இந்த சமுதாயமும் பக்க துணையாக உள்ளது என்பதனை சொல்லி தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சமுதாய வளைகாப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார். தாய்மை என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான கால கட்டமாகும். கர்ப்பிணி தாய்மார்கள் எவ்வித மன அழுத்தத்திற்கும் ஆளாகாமல் மன மகிழ்ச்சியுடன் பேறுகாலத்தை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது.

ஒரு குழந்தையின் வளர்ச்சியானது கருவாக உருவான நாளிலிருந்தே ஆரம்பமாகிறது. இதனை மனதிற்கொண்டு கர்ப்பிணி பெண்கள், கர்ப்பகாலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சிறந்த திட்டம் தான் சமுதாய வளைகாப்பு திட்டமாகும்.பொருளாதார வசதி குறைவாக உள்ள குடும்பத்தினரால் நடத்திட இயலாத சூழ்நிலையினை மாற்றுவதற்காகவும், சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி இன்று அனைவருக்கும் சமுதாய வளைகாப்பு நடத்திட வேண்டும் என்பதற்காக இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டு அனைத்து கர்ப்பிணி பெண்களும் பயனடைந்து வருகின்றனர்.

இத்திட்டத்தின் வாயிலாக, பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கர்ப்பகால பராமரிப்பு குறித்த தகவல்கள் கர்ப்பிணித் தாய்மார்களை சென்றடைய செய்து அவர்கள் அதை பின்பற்றுவதை உறுதி செய்தல், கர்ப்பிணிகள் இறப்பு விகிதத்தை குறைத்தல். சிசு மரணத்தை தவிர்த்தல், ஆரோக்கியமான அறிவான குழந்தைகள் பிறப்பதை உறுதிப்படுத்துதல், குழந்தைகளின் பிறப்பு எடை 3 கிலோவாக இருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்துதல், மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல்,  குழந்தைகளின் வளர்ச்சிப் படிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மகப்பேறு உதவித் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தாய்ப்பாலின் அவசியம், நன்மைகள், இணை உணவின் அவசியம், குழந்தைகள் நோய் வாய்ப்படும் போது அளிக்கப்பட வேண்டிய கவனிப்பு போன்ற பல விவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவை குறித்து கர்ப்பிணி பெண்களுக்கு கற்றுத்தரவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது.

கர்ப்பிணி தாய்மார்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கூறும் அறிவுரை மற்றும் வழிமுறைகளை தவறாது பின்பற்றி அறிவான, ஆற்றல் மிக்க குழந்தை பேற்றினை பெற்றிட வேண்டும் எனதொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான் I A S., ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணியாளர்கள், கர்ப்பிணி பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News