வித்யா ராம்ராஜுக்கு ரூ.1.55 கோடி பரிசு.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு தங்கம் வெல்ல உதவிய தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு ரூ.75 லட்சம் ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் இப்போட்டிகளில் வித்யா ராம்ராஜுக்கு கிடைத்துள்ள மொத்த பரிசுத்தொகை ரூ.1.55 கோடியாக உயர்ந்துள்ளது. முன்னதாக கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்றதற்காக ரூ.50 லட்சமும், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலம் வென்று பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்ததற்காக ரூ.30 லட்சமும் வழங்கப்பட்டன.ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வித்யா ராம்ராஜ் இதுவரை ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்றுள்ளார்.
0
Leave a Reply