25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


அனைத்து ரயில்களிலும் வந்தே பாரத் உட்பட ,இன்று முதல்  புதிய கட்டண உயர்வு அமல் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அனைத்து ரயில்களிலும் வந்தே பாரத் உட்பட ,இன்று முதல்  புதிய கட்டண உயர்வு அமல் .

அனைத்து விரைவு ரயில் களிலும், இன்று முதல் புதிய கட்டண உயர்வு அமலாகிறது.குறைந்தபட்சமாக, 5 ரூபாய் முதல் அதிகபட் சமாக, 45 ரூபாய் வரை உயரும்' என, ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில்வேயில் ஊழியர் களின் சம்பள உயர்வு, ஓய்வூதிய செலவு, முதலீட்டு செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால், வரும் 26ம் தேதி முதல்  சிறிய அளவில் கட்டணம் உயர்த்தப்படும் என, கடந்த 21ம் தேதி ரயில்வே அறிவித்தது.

அதன்படி, முதல் 215 கி.மீ.,துாரத்துக்கு மேல் செல்லும் ரயில்களுக்கு மட்டும் கட்டணம் -உயர்த்தப்படுகிறது.புறநகர் மின்சார ரயில் களில், கட்டணம் உயர்வு இல்லை. மாதந்திர சீசன் டிக்கெட்டிலும், கட்டணம் உயர்த்தப்பட வில்லை.

தெற்கு ரயில்வே அதிகாரிகள் சென்னையில் இருந்து, மதுரை, திருநெல்வேலி, நாகர் கோவில், கன்னியாகுமரி, கோவை செல்லும் ரயில்களில், ரயில்வேயின் புதிய கட்டண உயர்வுபடி,  முன்பதிவு இல்லாத பெட்டிகளில் 5 ரூபாய்; ஸ்லீப்பர் மற்றும் 'ஏசி' பெட்டிகளில் 15 ரூபாய் வரைகட்டண உயர்வு இருக்கும் என, தெரிவித்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News