25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


ராஜபாளையத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவமனை தாமதம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவமனை தாமதம்.

ராஜபாளையத்தில் உயர் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் விருதுநகருக்கும், திருநெல்வேலிக்கும் பரிந்துரைக்கும் நிலை ஏற்பட்டு வந்தது. தொடர் கோரிக்கையை அடுத்து மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக நவீன வசதிகளுடன் தரம் உயர்த்த ரூ.40 கோடி மதிப்பில் மருத்துவமனை வளாகத்தில் 1.8 ஏக்கர் பரப்பளவில் அடிக்கல் நாட்டப்பட்டது.'

மொத்தம் 227 படுக்கை வசதிகளுடன் விபத்து சிகிச்சை பிரிவு, எம்.ஆர்.ஐ ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளோடு 4 மாடியுடன் பல்நோக்கு வளாகம் பணிகள் நடந்து வருகிறது. கடந்த - ஆண்டு டிச.20க்குள் கட்டுமான பணி முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். அடிக்கல் நாட்டி இரண்டு ஆண்டுகள் கடந்தும் பயன் பாட்டிற்கு வரவில்லை. 

பணி முடிந்து பொதுப்பணித்துறை ஒப்படைக்காததால் மின் இணைப்பு பெற முடியவில்லை. 50 சதவீத உபகரணங்கள் வந்துவிட்ட நிலையில் தாமதம் காரணமாக நோயாளிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.புதிய மருத்துவமனைக்கு தேவையான 10 டாக்டர்கள், செவிலியர்கள், 'டெக்னீசியன்கள் உள்ளிட்ட 70 அலுவலர்களை உடனடியாக நியமனம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News