தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 இல் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (40% மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) ஆகிய பிரிவினருக்கு வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் வாக்களிக்கும் வசதியை வழங்கி உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ல் வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிக்க விரும்பும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான இடங்களில் உதவ தன்னார்வலர்கள், சாய்வுதளம், சக்கர நாற்காலிகள், காத்திருப்புப் பகுதி, கழிப்பறைகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இருப்பினும் இந்திய தேர்தல் ஆணையம், வருகின்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 இல் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (40% மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) ஆகிய பிரிவினருக்கு வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் வாக்களிக்கும் வசதியை வழங்கி உள்ளது.
இந்த வசதிகளை பெறுவதற்காக படிவம் 12டி என்ற படிவத்தில் தங்களது விருப்பத்தை மேற்காணும் வாக்காளர்கள் தெரிவிக்க வேண்டும். மேற்படி படிவத்தை தங்கள் பகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடி நிலை அலுவலர்கள் மேற்படி வாக்காளர்களின் வீடுகளுக்கே 20.03.2026 முதல் 03.04.2026 வரை நேரில் வந்து வழங்குவார்கள். வாக்குப் பதிவு நாளன்று வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க இயலாத 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி (40% மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) மேற்படி படிவத்தை பூர்த்தி செய்து 03.04.2026-க்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்க வேண்டும்.
மேற்கண்டவாறு வீட்டிலேயே இருந்து வாக்களிக்க விருப்பம் தெரிவித்தவர்களின் வீட்டிற்கு இரண்டு வாக்குச்சாவடி அலுவலர்கள், ஒரு வீடியோகிராபர் நுண்பார்வையாளர்கள் மற்றும் ஒரு பாதுகாவலர் அடங்கிய வாக்குப்பதிவு குழுவானது சென்று, வாக்காளரை தபால் வாக்குச்சீட்டில் வாக்களிக்கச் செய்யும். மேற்படி வாக்குப்பதிவின் இரகசியம் காக்கப்படும்.மேற்படி வாக்குப்பதிவு குழு வருகை தரும் தேதி மற்றும் தோராயமான நேரம் குறித்து படிவம் 12டி விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அலைபேசி எண்ணில் குறுஞ்செய்தி தபால் அல்லது வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலமாக வாக்காளர்களுக்கு முன்னரே தெரிவிக்கப்படும்.
முதல் வருகையின் போது கொடுக்கப்பட்ட முகவரியில் வாக்காளர் இல்லையெனில், வாக்குச் சேகரிக்கும் குழுவானது அவர்களின் இரண்டாவது வருகையின் தேதி மற்றும் நேரத்தை அறிவிப்பார்கள்.இரண்டாவது வருகையின் போதும் வாக்காளர் வீட்டில் இல்லையெனில், மேற்கொண்டு மறுவருகையோ அல்லது நடவடிக்கையோ எடுக்கப்பட மாட்டாது. தபால் ஓட்டு மூலம் வீட்டில் வாக்களிக்கும் வசதியை விருப்பத்தின்பேரில் தேர்வு செய்யும் வாக்காளர்கள், வாக்குப்பதிவு நாளில் நேரடியாக வாக்குச்சாவடியில், வாக்களிக்க இயலாது.
மேலும், வாக்குப்பதிவு குழுவின் இரண்டாவது வருகையின் போதும் வீட்டில் இருக்க தவறிய வாக்காளர்களுக்குத் தபால் வாக்குச் சீட்டு (Postal Ballot) மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) ஆகிய இரண்டிலும் வாக்களிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதை அறியவும். மேலும் மேற்படி வசதியைப் பெறுவதில் தகவல் ஏதேனும் தேவைப்படின் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 2166 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply