25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஆமை இனமே அழிந்து போவதற்கு  வாய்ப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆமை இனமே அழிந்து போவதற்கு  வாய்ப்பு.

உலக வெப்பமயமாதலால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இதைக் குறைப்பதற்கான நடவடிக் கைகள் உலகளாவிய அள வில் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், இது உரிய வேகத்தில் மேற் கொள்ளப்படவில்லை என் பதுதான் உண்மை.

உலக வெப்பமயமாதலால் கடல் வெப்ப நிலையும் அதிகரிக் கிறது.இதனால் கடல் வாழ் உயிரினங்கள் கடு மையாக பாடுக்கப்ப பாதிக்கப்படு கின்றன. அவற்றில் சில விலங்குகள் மாறுகின்ற வெப்ப நிலைக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளத் துவங்கியுள்ளன.அவற்றுள்ஒன்று 'பச்சைஆமை', சைப்ரஸ்நாட்டில்மேற்கொள்ளப்பட்டஆய்வில், இதுஉறுதிசெய்யப்பட்டுள்ளது.வழக்கமாக இந்த ஆமைகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தான் கரைக்கு வந்து முட்டை யிடும். ஆனால், கடலின்வெப்பநிலை அதிகரித்து வருவதால், வழக்கத்தை விட சீக்கிரமாக வந்து தங்களுடைய முட்டைகளை இட்டுச் செல்கின்றன.

அதாவது கடலின் வெப்ப நிலை ஒவ் வொரு டிகிரி அதிகரிக்கும் போதும், 6.4 நாட்கள் முன் கூட்டியே இவை கரைக்கு வருகின்றன. ஏனென்றால் வெப்பநிலை அதிகரிக்கும்  போது முட்டைக்குள்ளே இருக்கின்ற குஞ்சு அழிந்து போக வாய்ப்புள்ளது. வெப்பநிலை மாறுவதற்கு ஏற்ப தன் இனத்தைக் தற்காத்துக் கொள்வதற்காக இவ்வாறு ஆமைகள் இப் படிச் செய்கின்றன.

ஆனால், இந்த யுக்தி நீண்ட நாள்களுக்குப் பயன்  தராது. ஒரு கட்டத்தில் வெப்பநிலை கட்டுக் கடங்காமல் அதிகரிக்கும் போது, இந்த ஆமை இனமே அழிந்து போவதற்கு  வாய்ப்புள்ளது என்று என்று உயிரியலாளர்கள் கூறுகின்றனர். எனவே, வெப்பநிலை அதிகரிப்பதைக்  கட்டுப்படுத்த வேண்டியது நம்முடைய கடமையாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News