25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


வீட்டில் பச்சைமிளகாய் செடிகளைவளர்க்கும் வழிமுறைகள்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வீட்டில் பச்சைமிளகாய் செடிகளைவளர்க்கும் வழிமுறைகள்!

பச்சை மிளகாயின் விலை அடிக்கடி உயர்ந்து மக்களை கவலைக்குள்ளாக்குகிறது. பச்சை மிளகாய் பயன்பாடு என்பது சமையலில் தவிர்க்க இயலாத ஒன்றாக இருந்து வருகிறது. இந்தப் பச்சைமிளகாயை எளிமையான முறையில் வீட்டிலேயே வளர்க்கலாம்.

இதற்கு முதலில் நிழலோடுகூடிய வெயில் படும் இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர், 3 முதல் 4 அங்குல ஆழத் தொட்டியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்தத் தொட்டியில் நீர் ஊற்றினால் வழிந்தோடக்கூடிய வகையில் துளை உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். 

தேவையான இயற்கை உரத்தை இட்டு, மண்ணை நிரப்பி, தரமான மிளகாய் விதைகளை எடுத்து தொட்டியில் 1 அங்குல ஆழத்தில் நட வேண்டும். 5 முதல் 6 மணி நேரம் சூரிய ஒளி படும் இடத்தில் தினமும் அந்தத் தொட்டியை வைக்கவும். 

தொடர்ச்சியாக செடி வளர்கிறதா எனக் கவனித்து வர வேண்டும். அதோடு செடி ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் ஊற்றி வர வேண்டும். மிளகாய் செடி விதைத்ததிலிருந்து 50 முதல் 60 நாள்களுக்குள் மிளகாயை அறுவடை செய்யலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *