சருமத்தில் உள்ள கருமையை அகற்ற...
வெயிலால் முகம் கருமையாகாமல், பளிச்சென்று வெள்ளையாகவே இருக்க வேண்டுமானால், அதற்கு நம் வீட்டில் உள்ள தயிர் பெரிதும் உதவி புரியும். ஏனெனில் தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தில் உள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் வெளியேற்றி, சரும செல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. முக்கியமாக தயிர் மெலனின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது. இப்படிப்பட்ட தயிரை ஒருசில பொருட்களுடன் சேர்த்து ஃபேஸ் பேக் தயாரித்து கோடைக்காலத்தில் பயன்படுத்தி வந்தால், முகம் கருமையாகாமல் வெள்ளையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். சரும கருமையைப் போக்கும் தயிர் ஃபேஸ் பேக்.
ஒரு பௌலில்1,2 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அதை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.பின் அதை முகம், கழுத்து மற்றும் கருமையாக இருக்கும் கைகளில் தடவி3,5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.அதன் பின்15,20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.இப்படி வாரத்திற்கு2,3 முறை பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள கருமையை அகற்றலாம்.
0
Leave a Reply