தக்காளி ஜாம்.
தேவையான பொருட்கள்:
தக்காளி -500 கிராம்
சர்க்கரை - 350 கிராம்
எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி
பட்டை, கிராம்பு - சிறிதளவு
செய்முறை:
கொதிக்கும் வெந்நீரில், தக்காளியை கீறி போட்டு, மூடி வைக்கவும். ஆறியதும், தோல் உரித்து, விதையை
நீக்கி, சதைப்பகுதியை மட்டும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, இந்த கலவையை போட்டு, நீர் சுண்டும் வரை கிளறவும். பின், சர்க்கரையைசேர்க்கவும்.
கலவை கொதித்து கெட்டியானதும்,எலுமிச்சை சாறு சேர்க்கவும். பட்டை மற்றும் கிராம்பைபொடி செய்து போட்டு,கிளறிஇறக்கவும்.
சுவையான தக்காளி ஜாம் தயார். இட்லி, தோசை,ரொட்டியில் தடவி கொடுத்தால். குழந்தைகள் விரும்பிஉண்பர்.
கண்ணாடி பாட்டில்களில் வைத்து பயன்படுத்தலாம்.
0
Leave a Reply