25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5.25 கோடி கூடுதல் நிவாரணம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5.25 கோடி கூடுதல் நிவாரணம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக முதலமைச்சர் மொத்தம் ரூ.5.25 கோடி கூடுதல் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

நிவாரணத் தொகை விவரம்:

உயிரிழந்தவர்களின் குடும்பங்கள்: உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு ஏற்கனவே ரூ.25 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாகத் தலா ரூ.25 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3.25 கோடி வழங்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள்: காயமடைந்த40 நபர்களுக்கு ஏற்கனவே ரூ.5 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாகத் தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2 கோடி வழங்கப்படுகிறது.

நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News