25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


தேசிய அளவிலான சிறந்த கல்வி நிறுவனங்களை பார்வையிட பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய அளவிலான சிறந்த கல்வி நிறுவனங்களை பார்வையிட பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர் .

விருதுநகர் மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2026-2027 ஆம் கல்வியாண்டில் சுமார் 7000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகின்றனர். அம்மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கிலும், தேசிய அளவில் சிறந்து விளங்கும் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள படிப்புகள், சேர்க்கை நடைமுறைகள் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்கள் நேரடியாக அறிந்து கொள்ளும் வகையிலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறப்பான கல்விச் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் மாணவர்களிடையே உயர்கல்வி குறித்த அச்சம், தயக்கம் மற்றும் குழப்பங்களைப் போக்கி, அவர்களுடைய ஆர்வம், திறமை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப உயர்கல்வியைத் தேர்ந்தெடுப்பதற்கான நம்பிக்கையையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தி, அவர்களின் பொருளாதாரச் சூழல் எதுவாக இருந்தாலும், சரியான வழிகாட்டுதல் மற்றும் முயற்சியின் மூலம் அனைவரும் உயர்கல்வி பெற முடியும் என்ற எண்ணத்தை மாணவர்களிடையே உருவாக்கி அவர்களின் இலக்கை அடைவதற்கு வழிவகைசெய்கிறது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பில் சிறந்து விளங்கும் 3,000 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, தமிழ்நாடு மற்றும் பிற பகுதிகளில் உள்ள பல்வேறு தேசியத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, 11.11.2026 அன்று திருச்சியில் அமைந்துள்ள தேசிய (National Institute of Technology - NIT) மற்றும் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (Tamil Nadu National Law University - TNNLU) ஆகிய இரு புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு தலா 60 மாணவர்கள் வீதம் மொத்தம் 120 மாணவர்கள் இரண்டு பேருந்துகள் மூலம் உரிய வழிகாட்டி ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுடன் கல்விச் சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து இன்று(12.11.2026) மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் மதுரை அரசு மருத்துவக்கல்லூரிக்கு தலா 60 மாணவர்கள் வீதம் மொத்தம் 120 மாணவர்கள் இரண்டு பேருந்துகள் மூலம் உரிய வழிகாட்டி ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுடன் கல்விச் சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் மாணவர்கள் பொறியியல், மருத்துவம், வழக்கறிஞர் உள்ளிட்ட பல படிப்புகளை பயில்வதற்கு மாணவர்களிடையே ஏற்படும் சந்தேகங்களை போக்கி அவர்களுக்கு உரிய ஆலோசனைகளும், வழிமுறைகளும் வழங்கி அவர்களின் இலக்கை அடைவதற்கு உறுதுணையாக அமைகிறது.

அதேபோல், அடுத்து வரும் நாட்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள், புகழ்பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு வேளாண்மைக் கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களைத் தொடர்ந்து கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களிடம் உயர்கல்வியின் முக்கியத்துவம், தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான வாய்ப்புகள், போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்புகள் மற்றும் எதிர்கால இலக்குகளை நிர்ணயித்துக் கொள்வது குறித்து ஊக்கமளிக்கும் வகையில் பல்வேறு ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகின்றன.

இந்தக் கல்விச் சுற்றுலாவின் போது, மாணவர்கள் தாங்கள் பார்வையிடும் கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள், நூலகங்கள், பல்வேறு துறைகளில் வழங்கப்படும் பட்டப்படிப்புகள், சேர்க்கைக்கான தகுதிகள், நுழைவுத் தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்களை நேரடியாக அறிந்து கொள்ள உள்ளனர். மேலும், அக்கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடி தங்களது உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களுக்குத் தெளிவு பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் வாயிலாக, கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களின் கல்விச் சூழலை நேரடியாக அறிந்து கொண்டு, தங்களது எதிர்காலக் கல்வி இலக்குகளைத் தெளிவாக நிர்ணயித்துக் கொள்ளும் வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News