பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM -YASASVI - Top Class Education in Schools for OBC, EBC, & DNT Students கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ,. அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
இதர பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் PM -YASASVI - Top Class Education in Schools for OBC, EBC, & DNT students மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட ( Top Class Schools) பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ. 2.50 இலட்சம்
இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்:30.09.2025
கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கடைசி நாள்:15.10.2025
புதுப்பித்தல்:
இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்களின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (htts://scholarships.gov.in) (National Scholarship Portal) Renewal Application என்ற இணைப்பில் (Link) சென்று OTR Number (One Time Registration) பதிவு செய்து 2025--26 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பித்தல் ( Renewal) மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
புதியது:
இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள், தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் தங்களது கைப்பேசி எண் (Mobile Number) மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் OTR Number & Password பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும்.
மேற்படி OTR Number பயன்படுத்தி 2025-26 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியது (Fresh Application) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிந்திட தொடர்புடைய முதன்மை கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship Portal (htts://scholarships.gov.in) இணையதளத்தினை அணுகி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்
தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply