25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்துவதால்...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்துவதால்...

சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்தும் பழக்கம் பலரிடம் இருந்தாலும், அதன் முழுமையான ஆரோக்கிய நன்மைகளை அறிந்தவர்கள் குறைவுதான். வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உடலுக்கு கிடைக்கும் அற்புதமான நன்மைகள்கிடைக்கும்.வெல்லத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்புச்சத்து, செலினியம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனால்தான் சித்த மருத்துவத்திலும் வெல்லத்திற்கு முக்கிய இடம் உண்டு.

 வெல்லத்தில் உள்ள இரும்புச்சத்து இரத்தத்தைச் சுத்திகரிக்கப் பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் உங்கள் சருமம் பொலிவு பெறுவதுடன், உடலும் ஆரோக்கியமாகப் பராமரிக்கப்படுகிறது.இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், உடலின் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு வெல்லம் ஒரு சிறந்த நிவாரணியாகச் செயல்படுகிறது. மேலும், தொண்டை புண், இருமல், சளி போன்ற பிரச்சனைகளுக்கும் அருமருந்தாக அமைகிறது.

 உணவு அருந்திய பிறகு வெல்லத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில், வெல்லம் செரிமான நொதிகளை சீராகச் செயல்படத் தூண்டுகிறது. இதனால், நாம் உட்கொண்ட உணவு எளிதில் உடைக்கப்பட்டு, விரைவாக ஜீரணமாக உதவுகிறது.இத்தனை சிறப்பம்சங்களை கொண்ட வெல்லத்தை சர்க்கரைக்கு மாற்றாக தாராளமாக பயன்படுத்தலாம். இருப்பினும், சர்க்கரையோ வெல்லமோ எதுவாக இருந்தாலும், அளவோடு எடுத்துக்கொள்வதுதான் ஆரோக்கியத்திற்கு எப்போதும் நல்லது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News