வல்லாரை கீரை சட்னி.
தேவையான பொருட்கள்:
வல்லாரை கீரை: 1 கப்
சின்ன வெங்காயம்: 15
உளுத்தம்பருப்பு: 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு: 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் (அல்லது வரமிளகாய்): 2
தேங்காய் துருவல்: 2 ஸ்பூன்
புளி: சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு: தேவையான அளவு
எண்ணெய் மற்றும் கடுகு: தாளிக்க
செய்முறை :
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும்.
பின் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
சுத்தமாக கழுவிய வல்லாரை கீரை மற்றும் புளி சேர்த்து கீரை
சுருங்கும் வரை வதக்கவும்.
தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து இறக்கி ஆறவிடவும்.
மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
தாளிப்பு கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை தாளித்து
சட்னியில் கொட்டவும்.
ஞாபக சக்தியைப் பெருக்கும் சத்தான வல்லாரை கீரை சட்னி தயார்.
0
Leave a Reply