விருதுநகர் அரசு இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் ஒகேசனல் ட்ரெய்னிங் இன்ஸ்டிடியூட் கல்லூரியில் மாவட்ட தீயணைப்புத் துறையின் சார்பில் 25.09.2025 அன்று தீ பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் அரசு இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் ஒகேசனல்; ட்ரெய்னிங் இன்ஸ்டிடியூட் கல்லூரியில் மாவட்ட தீயணைப்புத் துறையின் சார்பில் 25.09.2025 அன்று தீ பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த ஒத்திகை பயிற்சியில் பேரிடர் காலங்கள் மற்றும் விபத்துக்களில் தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறைக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களைக் கொண்டு எவ்வாறு பணிபுரிந்து வருகின்றோம் என்றும், பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும், மீட்கப்பட்ட அவர்களை எவ்வாறு தூக்கி சென்று ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கலாம் என்றும், தீ விபத்தின் வகைகள் குறித்தும், அதனை ஆரம்ப நிலையில் தடுக்கும் முறைகள் குறித்தும், பெரும் தீ விபத்துக்கள் மற்றும் ஆயில் தீ விபத்துக்களை எவ்வாறு தீயணைப்பு ஊர்திகளை கொண்டு எளிதில் அணைக்கலாம் எனவும் விளக்க உரை மற்றும் செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.
மேலும், அவசர கால மீட்பு ஊர்தியில் உள்ள மீட்பு கருவிகளான மகிட்டா ஷா (அ) பவர் ஷா கட்டர் ரூ ஸ்பிரிட்டர், அயன் கட்டர், கான்கிரீட் கட்டர், ஹைட்ராலிக் கட்டர் அன்டு ஸ்பிரட்டர், மேனுவல் கட்டர், ஹைட்ராலிக் ஜாக்கி, ஏர் லிப்டிங் பேக், டெலஸ்கோபி லேடார், அஸ்காலைட், டோர் ஓப்பனர், மூச்சுக்கருவி, பி.பி. சூட், மிதவை படகு(இரப்பர் படகு), தீயணைப்பான்கள் போன்ற செயல்படும் விதங்கள் பற்றியும்,
விபத்தின் போது பாதிக்கப்பட்ட நபர்களை மீட்க பயன்படுத்தும் இரண்டு கை முறை, மூன்று கை முறை, நான்கு கை முறை, உப்பு மூட்டை முறை, முதுகுக்குப் பின் முதுகு வைத்து தூக்குதல், குழந்தை தூக்குதல் முறை, உட்காரும் சேர் மூலம் மீட்டல், போர்வை மூலம் மீட்டல், தீயணைப்பாளர் தூக்கி போன்ற மீட்பு முறைகள் பற்றியும் செய்து காண்பிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி அலுவலர்(தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை) திரு.பாலமுருகன், கல்லூரி தலைவர் திரு.டிக்காட் ஜாக்சன், பேராசிரியர் திரு.சரவணன், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
0
Leave a Reply