அதிக பசி எடுப்பதற்கு என்ன காரணம்?
சிலருக்கு அடிக்கடி அதிக பசி எடுப்பது இயல்பாக இருக்கலாம். ஆனால் சில உடல்நலக் காரணங்களும் இதற்கு பின்னணியாக இருக்கலாம்.
மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும் போது உணவை அதிகமாக உட்கொள்ளும் பழக்கம் ஏற்படலாம். தைராய்டு ஹார்மோன் அதிகமாகச் சுரந்தால் அதிக பசி இருந்தாலும் உடல் எடை குறையக்கூடும்.
அலர்ஜி மருந்துகள், ஸ்டீராய்டு போன்ற சில மருந்துகளும் பசியை அதிகரிக்கலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தச் சர்க்கரை திடீரெனக் குறைந்தால் கடுமையான பசி, வியர்வை, இதயத் துடிப்பு அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும். உடனடியாக இனிப்பு எடுத்துக்கொண்டால் நிவாரணம் கிடைக்கும்.
குடல்புண், மது அருந்தும் பழக்கம், மன அழுத்தம் மற்றும் முதுமையில் ஏற்படும் டிமென்ஷியா போன்ற காரணங்களாலும் அதிக பசி தோன்றலாம்.
அதிக பசி நீண்ட நாட்களாகத் தொடருமானால் மருத்துவரை அணுகி காரணத்தை கண்டறிவது நல்லது. எந்த நோயும் இல்லாமல் அதிக பசி இருந்தால் அது நல்ல உடல்நலத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
0
Leave a Reply