கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை .
தேவையான பொருட்கள் -
2 கப் கோதுமை ரவை, 1/4 கப் கடலை பருப்பு,1/2 கப் தேங்காய் துருவல்
2-பச்சை மிளகாய் 4-வரமிளகாய்,1 துண்டு பொடியாக நறுக்கின இஞ்சி,
1ஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்,
2 ஸ்பூன் எண்ணெய், 1ஸ்பூன் நெய், கருவேப்பிலை,உப்பு
செய்முறை -
ஸ்டவ்வில் வெறும் வாணலி வைத்து மிதமான சூட்டில் கோதுமை ரவையை வாசம் வரும்வரை வறுக்கவும். கடலை பருப்பை முழுகும். அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடத்துக்கு பிறகு தண்ணி வடிகட்டி வரமிளகாய் சேர்த்து வடைக்கு அரைப்பதுபோல் அரைக்கவும்.
ஸ்டவ்வில் கடாய் வைத்து 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி ,கடுகு உளுத்தம்பருப்பு, சீரகம். வறுக்கவும்.
அத்துடன் பொடியாக நறுக்கின இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கி பிறகு 3-4 கப் தண்ணி ஊற்றி உப்பு சேர்க்கவும்.
அத்துடன் அரைத்து வைத்திருக்கும் கடலை பருப்பு, மற்றும் தேங்காய் துருவல், நெய் சேர்த்து ,நன்கு கொதிக்க விட்டு வறுத்த கோதுமை ரவை சேர்த்து மிதமான சூட்டில் மூடி வைத்து 10 நிமிடம் வேக விடவும்.
நன்கு வெந்ததும் ஆறவிட்டு சின்ன கொழுக்கட்டைகளாக செய்து இட்லி தட்டில் எடுத்து வைத்து 7 நிமிடம் ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
வித்தியாசமான சுவையுடன் கூடிய கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை தயார்... தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடவும்.
கோதுமை ரவை வைத்து கார கொழுக்கட்டை மிகவும் வித்தியாசமான ருசியில் சுவையாக இருந்தது.
0
Leave a Reply