கொழுக்கட்டைக்கு மாவு பிசையும் போது.....
கொழுக்கட்டைக்கு மாவு பிசையும் போது மிகவும் கெட்டியாக பிசையாதீர்கள் பிசைந்தால் கொழுக்கட்டை கல்லை போல கெட்டியாக தான் வரும்.
மாவை மிகவும் லூசாக பிசையவும் கூடாது. இதனால் கொழுக்கட்டை பிசுபிசு என்று ஒட்டிக் கொண்டு தான் வரும்.
மாவு பிசைந்த பின் கையை வைத்து அமுக்கி பார்த்தால், நன்கு அமுங்குவது போலவும்,மிருதுவாக இருக்கும் படியும் பிசைந்து கொள்ளுங்கள்.
வீட்டில் செய்த அரிசி மாவோ அல்லது கடையில் வாங்கிய அரிசி மாவோ, அதோடு 2 ஸ்பூன் உளுத்து வறுத்து பொடியாக்கி சேர்த்து மாவு பிசைந்து, கொழுக்கட்டை சுட்டால் விரிசல் ஏற்படாது கொழுக்கட்டை மிருதுவாக இருக்கும்
கொழுக்கட்டை செய்யும் போது பூரணத்திற்கு வெல்லப்பாகு தாயாரித்த பின், அதை வடிகட்ட வேண்டும் .அதிலிருக்கும் மண் நமது கொழுக்கட்டை சுவையையே பழாக்கிவிடும்.
0
Leave a Reply