உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: லக்சயா சென் வெற்றி.
டெல்லியில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் 30-வது சீசன் தொடங்கியது. இந்தியாவில் 2-வது முறையாக இந்த போட்டி நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீரர் லக்சயா சென், ஆஸ்திரியாவின் கோலின்ஸ் பிலிமானை எதிர்கொண்டார். முதல் செட்டை 16-21 என்ற கணக்கில் இழந்த லக்சயா சென், அடுத்த இரு செட்களில் அதிரடியாக விளையாடி 21-8, 21-4 என வெற்றி பெற்றார்.
45 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் லக்சயா சென் 16-21, 21-8, 21-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் உன்னதி, மியான்மரின் தெட் துஜாரை எதிர்கொண்டார். முதல் செட்டை 22-20 என்ற கணக்கில் கைப்பற்றிய உன்னதி, 2-வது செட்டையும் 21-16 என வென்றார். இதன்மூலம் 40 நிமிடங்களில் நேர் செட்டில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரீசா மற்றும் காயத்ரி ஜோடி, அமெரிக்காவின் அல்லிசன்–லாரென் ஜோடியை எதிர்கொண்டது. 39 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியில் இந்திய ஜோடி 21-15, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
0
Leave a Reply