25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்அவர்கள் வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டுகளை வழங்கி இத்திட்டம் குறித்து கலந்துரையாடினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்அவர்கள் வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டுகளை வழங்கி இத்திட்டம் குறித்து கலந்துரையாடினார்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் விருதுநகர் மாவட்டம், சிவகாசி என்.ஆர்.கே.இராஜரத்தினம் பேருந்து நிலையத்தில்(05.10.2026) வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டுகளை வழங்கி இத்திட்டம் குறித்து கலந்துரையாடினார்.தமிழ்நாடு அரசு, பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சேவைகள் எளிதாகவும், தடையின்றியும் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கமாகும்.அந்த வகையில் தமிழ்நாடு அரசின் மகளிர் நலன் சார்ந்த முக்கியத் திட்டங்களில் ஒன்றான வெற்றிப் பயணம் 02.10.2026 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மகளிர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின்  பயணத் தேவையை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், சிவகாசி கிளையிலிருந்து 30 நகர பேருந்துகள் மூலம் 218 நடைகளும், 9 புறநகர் பேருந்துகள் மூலம் 26 நடைகளும்  என மொத்தம் 39 கட்டணமில்லா  பேருந்துகள் மூலம் 244 நடைகள் இயக்கப்படுகின்றன.இத்திட்டம் மூலம் பயணம் மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டுகள் வழங்கப்படுவதன் மூலம், அவர்களின் அன்றாடப் பயணத் தேவைகளுக்கு ஆதரவாக அமைகிறது. குறிப்பாக, வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம், அரசு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பயனாளிகளுக்கு இத்திட்டம் பயனுள்ளதாக உள்ளது.

இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பயனாளிகளிடம் நேரடியாகக் கேட்டறிந்து அவர்கள் பெற்றுவரும் பயன்கள், எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் தேவையான கூடுதல் வசதிகள் குறித்து கேட்டறியப்பட்டது. பொதுமக்கள் அரசின் நலத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, அதன் மூலம் கிடைக்கும் பயன்களைப் பெற்று பயன்பெற வேண்டும் என  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான் I A S., சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் திரு.கண்ணன், அரசு அலுவலர்கள், போக்குவரத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News