25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்  அவர்கள்  தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் (05.10.2026) தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ்  குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார்.தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெண்களின் நலன், தாய்–சேய் நலம், சமூகப் பாதுகாப்பு மற்றும் குடும்ப நலனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், குழந்தைகளின் பிறப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்று, அவர்களின் நலனையும் குடும்பங்களின் மகிழ்ச்சியையும் உறுதிப்படுத்தும் நோக்கில் “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், தகுதியுடைய குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுவது, குழந்தையின் பிறப்பை குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதோடு, அரசின் சமூக நலப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவும் அமைகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்திற்காக மொத்தம் 5 வட்டார தலைமை மருத்துவமனைகள் மற்றும் 72 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜூன் 22.06.2026 முதல் 27.09.2026 வரை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அந்தந்த அரசு மருத்துவமனைகளில் தலா 1 கிராம் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

 அதனடிப்படையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் மொத்தம் பயனாளிகளான 885 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில்  04.10.2026 வரை   சிவகாசி வட்டத்தைச் சேர்ந்த 347 குழந்தைகளுக்கும், சாத்தூர் வட்டத்தைச் சேர்ந்த 102 குழந்தைகளுக்கும்,  வெம்பக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த 133 குழந்தைகளுக்கும் என மொத்தம் 582 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளன.இன்றைய தினம் சிவகாசி வட்டத்தைச் சேர்ந்த 60 குழந்தைகள், வெம்பக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த 13 குழந்தைகள், சாத்தூர் வட்டத்தைச் சேர்ந்த 34 குழந்தைகள் என மொத்தம் 107 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் தலா 1 கிராம் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன.  மீதமுள்ள 196 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் சிவகாசி அரசு மருத்துவமனையில் 28.09.2026 முதல் இன்று வரை 34 குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 10 குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் கொடுத்து அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் குழந்தை பிறந்து சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கும், அவர்கள் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்லும்போது தாய்மாமன் தங்க மோதிரம் கொடுத்து அனுப்பி வைக்கப்படும்.எனவே, இத்திட்டத்தின் பயன்கள் அனைத்து பயனாளிகளையும் சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள் நல்ல உடல்நலத்துடன் வளரவும், அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையவும் வாழ்த்துக்கள் என  தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, இணை இயக்குநர் (மருத்துவ நலப் பணிகள்) மரு.காளிராஜ், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்I A S., மருத்துவர்கள், அரசு அலுலவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News