25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


உலக பாட்மின்டன்: மூன்றாவது சுற்றில் சிந்து.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக பாட்மின்டன்: மூன்றாவது சுற்றில் சிந்து.

டெல்லியில் நடைபெற்று வரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் சிந்து, கனடாவின் வென் யு ஜாங்-ஐ எதிர்கொண்டார். சிறப்பாக விளையாடிய சிந்து 21-16, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் உன்னதி ஹூடா, கனடாவின் மிஷெல் லீயை எதிர்கொண்டார். கடுமையாக போராடிய உன்னதி 21-11, 9-21, 21-23 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, இலங்கையின் துமிந்து அபேவிக்ரமாவை சந்தித்தார். அபாரமாக விளையாடிய ஆயுஷ் 21-8, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

கலப்பு இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா-தனிஷா கிராஸ்டோ ஜோடி, மக்காவ் அணியின் லியோங் இயோக் சோங்-வெங் சி ஜோடியை 21-11, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News