உலக யூத் மல்யுத்தம்: இந்திய வீராங்கனை காஜலுக்கு தங்கம்.
சுலோவாக்கியாவில் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்களுக்கான 76 கிலோ பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் காஜல், சீனாவின் ஜிங்ரு சன்னை எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய காஜல், 7-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். முன்னதாக அரையிறுதியில் அமெரிக்காவின் பைபரை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக யூத் மல்யுத்தப் போட்டியில் 72 கிலோ பிரிவிலும் காஜல் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
0
Leave a Reply