25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு, சுதந்திர தின விருது – 2026 க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு, சுதந்திர தின விருது – 2026 க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

சுதந்திர தின விழாவின் போது,  தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில், பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு, சுதந்திர தின விருது - 2026  வழங்கப்பட உள்ளது.

விருது விபரம்:

சிறந்த சமூக சேவகர்: ரூ.50,000/- ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்.

சிறந்த தொண்டு நிறுவனம்: ரூ.1,00,000/- ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்.

தகுதி மற்றும் விதிமுறைகள்:

விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

 குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையிலான பணிகள், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து, மக்களுக்குத் தொடர்ந்து தொண்டாற்றி இருக்க வேண்டும்.

 தொண்டு நிறுவனம் அரசின் உரிய அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்ட தகுதியுடைய சமூக சேவகர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், https://awards.tn.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலமாக வருகிற *19.06.2026-க்குள்* விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த விவரங்களை *23.06.2026-க்குள்* மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இது தொடர்பான விவரங்களை கீழே குறிப்பிட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

முகவரி

மாவட்ட சமூக நல அலுவலர்,

மாவட்ட சமூக நல அலுவலகம்,

மாவட்ட ஆட்சியரக வளாகம்,

விருதுநகர் மாவட்டம் – 626002.

தொலைபேசி எண்: 04562-252701

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News