உளுந்து ஜாமூன்
தேவையான பொருட்கள்:
உளுந்தம் பருப்பு 250 கிராம்
பால் பவுடர் 200 கிராம்
ஏலக்காய் 6
நெய்-100 கிராம்
எண்ணெய் 400
ரோஸ் எசன்ஸ் தேவையான அளவு.
செய்முறை:
உளுந்தம் பருப்பை நன்கு ஊற வைத்து, நீரை வடிகட்டிய பின், மிக்ஸியில் வெண்ணைய போல்
அரைத்து கொள்ளவும். அத்துடன் நெய், பால் பவுடர் சேர்த்து பிசைந்து, சிறு உருண்டையாக
உருட்டி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், உருண்டைகளை வேகவிட்டு எடுத்து, ஆற
வைக்கவும். பின், தேவையான அளவு ரோஸ் எசன்ஸை சேர்த்து சர்க்கரை பாகு
தயாரிக்கவும்.பாகு சற்று ஆறியதும், அதில் உருண்டைகளை போட்டு, மூன்று மணி நேரம் ஊற
வைக்கவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த, சுவையான உளுந்து ஜாமூன் தயார்.
பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர்.
0
Leave a Reply