இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பிரதிகா அசத்தல் துவக்கம் தந்தனர். மந்தனா 70 பந்தில் சதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 233 ரன் சேர்த்த போது, மந்தனா (135 ரன், 80 பந்து, 7×6, 12×4) அவுட்டானார். சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்த பிரதிகா, ஒரு நாள் அரங்கில் தனது முதல் சதம் கடந்தார். இந்திய பெண்கள் அணி ஒருநாள் அரங்கில் அதிகபட்சமாக 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 435 ரன் குவித்தது. ஜெமிமா (4), தீப்தி (11) அவுட்டாகாமல் இருந்தனர். ஒருநாள் அரங்கில் அதிக சதம் அடித்த இந்திய வீராங்கனை வரிசையில் முதலிடத்தில் தொடர்கிறார் மந்தனா (10) மிதாலி (7), ஹர்மன்பிரீத் கவுர் (6) அடுத்து உள்ளனர்.அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 304 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சண்டிகரில் ஜூனியர் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென் னிஸ் தொடர் ,பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இத்தொடரின் 'நம்பர்-5' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் மாயா ரேவதி, பிரான்சின் இவா மரியேவை சந்தித்தார்.முதல் செட்டை கோவையை சேர்ந்த மாயா, 6-3 என கைப்பற்றி. முடிவில், 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, எளிதாக வசப்படுத்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மாயா, ரஷ்யாவின் பொலினா ஜோடி, செர்பியாவின் ஜான்கோவிச், ரஷ்யாவின் அன்னா ஜோடியை 6-4, 6-2 என வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
அமெரிக்காவின் கிளீவ்லாந்தில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் ,ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் 'நம்பர்-2' வீரர் வேலவன் செந்தில்குமார் (தமிழகம்), போர்ச்சுகலின் ருய் சோரசை எதிர்கொண்டார். முதல் செட்டை 11-6என கைப்பற்றிய வேலவன், அடுத்த செட்டை 11-5 என வசப்படுத்தினார். தொடர்ந்து மூன்றாவது செட்டிலும் அசத்திய இவர், 11–6 வென்றார்.முடிவில் வேலவன் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
உலக செஸ் சாம்பியன் ஷிப்பில் வென்ற ரூ. 8.62 கோடி உட்பட, மொத்தம் பங்கேற்ற 8 தொடரில், குகேஷ் ரூ. 13.60 கோடி சம்பாதித்துள்ளார். சீனாவின் டிங் லிரென், 5 தொடர்களில் ரூ. 10.20 கோடி சம்பாதித்து, இப்பட்டியலில் இரண்டாவதாக உள்ளார். உலக சாம்பியன் ஆன நார்வேயின் கார்ல்சன் (ரூ. 5.46 கோடி), நான்காவது இடம் பிடித்தார்.இந்தியாவின் பிரக்ஞானந்தா, 11 தொடர்களில் ரூ. 1.74 கோடி சம்பாதித்து, 'டாப்-10' பட்டியலில் இடம் பிடித்தார். இவர் 9வது இடம் பெற்றார்.இந்தியாவின் மற்ற நட்சத்திரங்கள் கொனேரு ஹம்பி (ரூ. 1.06 கோடி, 13வது இடம்), அர்ஜுன் (1.03 கோடி, 15வது) என இருவரும் 'டாப்-15' பட்டியலில் இடம் பெற் றனர். உலக செஸ் நட்சத்திரங் கள் கடந்த 2024ம் ஆண்டு சம்பாதித்த பரிசுத் தொகை விபரம் தெரியவந்துள்ளது. இதன்படி, 18 வயதில் இளம் உலக சாம்பியன் ஆன இந்தியாவின் குகேஷ், முதலிடத்தில் உள்ளார்.
இந்தியா வந்துள்ள அயர்லாந்து பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.. முதல் போட்டியில் இந்தியா வென்றது. நேற்று, ராஜ்கோட்டில் 2வது போட்டி நடந்தது.இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் சதம் கடந்து கைகொடுக்க, இந்திய பெண்கள் அணி 116 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 370 ரன் குவித்தது.இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3, பிரியா மிஷ்ரா 2 விக்கெட் சாய்த்தனர். கடந்த 2018ல் இந்திய அணியில் அறிமுகமான ஜெமிமா ரோட்ரிக்ஸ், 7 ஆண்டுகளுக்கு பின் தனது முதல் சர்வதேச சதத்தை நேற்று பதிவு செய்தார். ஜெமிமா கூறுகையில், "சர்வதேச அரங்கில் முதல் சதம் அடித்ததில் மகிழ்ச்சி. இத்தருணத்திற்காக 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. இன்னும் நிறைய சதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு கைகொடுக்க விரும்புகிறேன்," என்றார். ஆட்ட நாயகி விருதை ஜெமிமா வென்றார்.
இந்தியாவின் 15 வயது வீராங்கனை மாயா ரேவதி, பங்கேற்றார். இத்தொடரில் 'நம்பர்-8' (2வது சுற்று), 'நம்பர்-7' (காலிறுதி), 'நம்பர்-2' (அரையிறுதி) அந்தஸ்து பெற்ற வீராங்கனைகளை வீழ்த்திய மாயா ரேவதி, பைனலுக்கு முன்னேறி ,நேற்று ரஷ் யாவின் எக்டரினாவை எதிர்கொண்டார். கோவையை சேர்ந்த மாயா ரேவதி, 3-6 7-5, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார்.
அமெரிக்காவின் விளையாட்டு பத்திரிகை 'டிராக் அண்ட் பீல்ட் நியூஸ்'. கடந்த 1948ல் துவங்கப் பட்ட இப்பத்திரிகை, 'விளையாட்டின் பைபிள்' என போற்றப்படுகிறது. இதன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தடகள போட்டியில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து 'ரேங்கிங்' பட்டியல் வெளியிடப்படும்.கடந்த ஆண்டின் சிறந்த ஈட்டி எறிதல் வீரருக்கான 'ரேங்கிங்' பட்டியலில் இந் தியாவின் நீரஜ் சோப்ரா 27, மீண்டும் 'நம்பர்-1' இடம் பிடித்தார். இவர் உலகின் சிறந்த ஈட்டி எறிதல் வீரராகதேர்வானார்.கடந்தஆண்டுவெளியானதரவரிசையிலும்நீரஜ்சோப்ராமுதலிடம் பிடித்திருந்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா, கடந்த ஆண்டு டைமண்ட் லீக் போட்டிகளில் மூன்று முறை 2வது இடம் பிடித்திருந்தார். பின் லாந்தில் நடந்த பாவோ நுார்மி விளையாட்டில் மட்டும் தங்கம் வென்றிருந்தார். அமெரிக்காவின் விளையாட்டு பத்திரிகை 'டிராக் அண்ட் பீல்ட் நியூஸ்'. கடந்த 1948ல் துவங்கப் பட்ட இப்பத்திரிகை, 'விளையாட்டின் பைபிள்' என போற்றப்படுகிறது. இதன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தடகள போட்டியில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து 'ரேங்கிங்' பட்டியல் வெளியிடப்படும்.கடந்த ஆண்டின் சிறந்த ஈட்டி எறிதல் வீரருக்கான 'ரேங்கிங்' பட்டியலில் இந் தியாவின் நீரஜ் சோப்ரா 27, மீண்டும் 'நம்பர்-1' இடம் பிடித்தார். இவர் உலகின் சிறந்த ஈட்டி எறிதல் வீர ராக தேர்வானார்.கடந்த ஆண்டு வெளி யான தரவரிசையிலும்நீரஜ் சோப்ராமுதலிடம் பிடித்திருந்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா, கடந்த ஆண்டு டைமண்ட் லீக் போட்டிகளில் மூன்று முறை 2வது இடம் பிடித்திருந்தார். பின் லாந்தில் நடந்த பாவோ நுார்மி விளையாட்டில் மட்டும் தங்கம் வென்றிருந்தார்.
ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் தமிழக அணி 2-1 என பெங்கால் அணியை வீழ்த்தியது. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில், ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் தமிழகம், பெங்கால் அணிகள் மோதின. ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் தமிழகத்தின் செல்வம் கார்த்தி ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் தமிழக அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.இதுவரை விளையாடிய 5 போட்டியில், 3வது வெற்றியை பதிவு செய்த தமிழக அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. நேற்று, சென்னையில் நடந்த லீக் போட்டியில் ஒடிசா, சென்னை அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சம நிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட சென்னை அணிக்கு 48வது நிமிடத்தில் வில் மர் ஜோர்டான் ஒரு கோல் அடித்தார்.ஆட்டநேர முடிவில் போட்டி 2-2 என 'டிரா' ஆனது. இதுவரை விளையாடிய 15 போட்டியில், 4 வெற்றி, 4 'டிரா', 7 தோல்வி என 16 புள் ளிகளுடன் சென்னை அணி 10வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் முதன் முறையாக கோ கோ உலக கோப்பை தொடர் வரும் 13-19ல் டில்லியில் நடக்க உள்ளது. மொத்தம் 23 நாடுகளில் இருந்து 20 ஆண், 19 பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன.போட்டிகள் முதலில் 'ரவுண்டு ராபின்' முறையில் நடக்கும். பின் காலிறுதி, அரையிறுதி, ஜன. 19ல் பைனல் நடக்கும்.இந்திய ஆண்கள் அணி தனது முதல் போட்டியில் நேபாளத்தை (ஜன. 13 சந்திக்க உள்ளது. பெண்கள் அணி முதல் போட்டியின் தென் கொரியாவுடன் (ஜன. 14) மோதும்.ஆண்கள் அணிக்கு பிரதீக் வைக்கார், பெண் கள் அணிக்கு பிரியங்கா இங்லே கேப்டனாக நியமிக்கப்பட்டனர்.