25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


20 TH APRIL விளையாட்டு போட்டிகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

20 TH APRIL விளையாட்டு போட்டிகள்.

ஸ்குவாஷ் 

.உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர்அமெரிக்காவின் சிகாகோவில், வரும் மே 9,17நடக்க உள்ளது.இதற்கான ஆசிய தகுதிச் சுற்று, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது.

 இந்தியாவின் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் அனாஹத் சிங், ஹாங்காங்கின் டோபி சேமோதினர். இதில் அனாஹத் 3-1(11-4, 9-11, 11-2, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்தியாவின்ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ,வீர்சோட்ரானி, மலேசியாவின் அமீஷன்ராஜ் சந்திரன் மோதினர். வீர்சோட் ரானி 3-0 (11-3, 11-4, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.

அனாஹத், வீர் சோட்ரானி, தகுதிச் சுற்று பைனலில் உலக சாம்பியன்ஷிப் தொடரில் முதன்முறையாக களமிறங்க உள்ளனர். 

ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கு இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், அபே சிங், ரமித் டான்டன், நேரடியாக தகுதி பெற்றிருந்தனர். 

துப்பாக்கி சுடுதல் 

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் பெருவில், தொடர் ஆண்களுக்கான தனிநபர் 10 மீ.,'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியா வின் ருத்ராங்க் ஷ்பாலா சாகேப் பாட்டீல்(632.0 புள்ளி), அர்ஜுன் பாபுதா(631.9) 3,4 வதுஇடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர்.

10மீ.,'ஏர் ரைபிள்' பிரிவு பெண்களுக்கான தனி நபர் தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஆர்யா போர்ஸ் 633.56 புள்ளிகளுடன்,2வதுஇடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார். இந்திய வீராங்கனைகளான நர்மதா நிதின் ராஜு (627.6), சோனம் (623.5) முறையே 16, 30வதுஇடம் பிடித்தனர். அடுத்து நடந்த பைனலில் ஆர்யா, 188.1 புள்ளிகளுடன் 5வதுஇடம் பிடித்தார்.

இதுவரை 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. 

ஈட்டி எறிதல் 

18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய தடகள சவுதி அரேபியாவில் சாம்பியன்ஷிப் 6வது சீசன் நடந்தது.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி நடந்தது. இந்தியாவின் ஹிமான்சு, 67.57 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். 18 வயது ஆசிய சாம்பியன் ஷிப் ஈட்டி எறிதலில் இந்தியா கைப்பற்றிய முதல் தங்கம்..

இந்தியாவின் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் 2.03 மீ., தாவிய  தேவக் புசான், வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.

'மெட்லே ரிலே ' ஓட்டம் .

ஆண்களுக்கான 'மெட்லே ரிலே 'ஓட்டம் நடந்தது. இதன்படி முதல் வீரர் 100 மீ., அடுத்த வீரர் 200 மீ.,3வது வீரர் 300 மீ., கடைசி வீரர் 400 மீ., துாரம்(மொத்தம் 1000 மீ.)ஓடுவர். இந்தியா சார்பில் சிராந்த், சையது சபீர், சாகேத் மின்ஜி,காதிர்கான் அடங்கிய அணிபங்கேற்றது. 1நிமிடம்,52.15 வினாடி நேரத்தில் வந்து இரண்டாவது இடம்பிடிக்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

இந்திய பெண்கள் அணியினர், இரண்டாவது இடத்தில் 'பேடன்'மாற்றிய போது, கீழே தவறவிட்டதால் போட்டியை முடிக்காமல் வெளியேறினர். இந்திய அணி1 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கம் வென்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News