ஸ்ரீலஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளின் 35 வது ஆண்டு குருபூஜை விழா
ஆதன மீதில் அரசு சிவலிங்கம் போதும் இரண்டினில் ஒன்றைத்தா பித்து மேதகு சந்நிதி மேவுத் தரம்பூர்வங் காதலிற்சோடசங்காணுப சாரமே-திருமூலர்
நிகழும் மங்களகரமான குரோதி நாம ஸம்வத்ஸர ஆவணி மாதம் 24ம் தேதி (09.09.2024) திங்கள்கிழமை சஷ்டி திதி நன்னாளில் காலை 9.00 மணிக்கு மேல் ஸ்ரீலஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளின் 35 வது குருபூஜை விழா இராஜபாளையம் சிரஞ்சீவி மலைச்சாரலில் அமைந்துள்ள அவரது நினைவாலயத்தில் நடைபெற உள்ளது.
சொல்லோவியர், திருப்புகழ் உரைமணி, செந்தமிழ்ப் பேரொளி பேராசிரியர் திரு.சொ.சொ.மீ. சுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள். ஆன்மீக அன்பர்களும் சீடர்களும் கலந்து கொண்டு ஸ்ரீ சுவாமிகளின் குருவருள் பெற்றுய்ய வேண்டுகிறோம்.
இப்படிக்கு
ஸ்ரீ P.R.வெங்கட்ராம ராஜா தலைவர்,
ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் அறக்கட்டளை,
இராஜபாளையம்.
0
Leave a Reply