பருத்தி கொள்முதல் காட்டன் கார்ப்பரேஷன் மூலம் நிலையம் அமைக்க வேண்டும்என விவசாய சங்க மக்கள் எதிர்பார்க்கின்றனர் .
விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் ,அருப்புக்கோட்டை, பாலவநத்தம், திருச்சுழி, உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி சாகுபடி நடக்கிறது.
விவசாயிகள் தனியார் வியாபாரிகளுக்கு குறைந்த விலையிலும், கால தாமதமாக பணம் வருவதாலும் விளைந்த பருத்திக்கு உரிய விலை கிடைக்காமல் திண்டாடி வந்தனர். ஸ்டாக் வைக்கவும், விற்க முடியாமலும் பாதிப்பில் விவசாயிகள் !
15 ஆண்டுகளுக்கு முன்பு அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் அரசு கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் பருத்தியை கொடுத்து வந்தனர்.அதுவும் மூடப்பட்ட நிலையில், ஸ்டாக் வைக்கவும், விற்க முடியாமலும் பாதிப்பில் விவசாயிகள்
வேறு வழியின்றி தனியார் பருத்தி வியாபாரிகளுக்கு விற்று வந்தனர்.
இந்நிலையில், விவசாய சங்கங்கள் விருதுநகர் மாவட்டத்தில் அரசு பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
கலெக்டர் இந்த பிரச்னையில் காட்டன் கார்ப்பரேஷன் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய அருப்புக்கோட்டை, ராஜபாளையம் பகுதியில் பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் எனவிவசாய சங்க மக்கள் எதிர்பார்க்கின்றனர் .
0
Leave a Reply