இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ,மூன்று வித அறிமுக போட்டியிலும் தலா 3 விக்கெட் சாய்த்த முதல் இந்திய பவுலர் ஆனார் ஹர்ஷித்ராணா.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ராணா என இருவர் அறிமுகம் ஆகினர்.
.இங்கிலாந்து அணி 47.4 ஓவரில் 248 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி 38.4 ஓவரில் 251/6 ரன் எடுத்து 4 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா 23. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் அறிமுகம் ஆன இவர், முதல் இன்னிங்சில் 3 விக்கெட் சாய்த்தார்.
சமீபத்தில் புனே 'டி-20'ல் (எதிர்-இங்கிலாந்து) அறிமுகம் ஆன ஹர்ஷித், 3 விக்கெட் வீழ்த்தினார்.நேற்று நாக்பூர் ஒருநாள் போட்டியில் (இங்கிலாந்து) அறிமுகம் ஆனார். இதில் 3 விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து மூன்று வித அறிமுக போட்டியிலும் தலா 3 விக்கெட் சாய்த்த முதல் இந்திய பவுலர் ஆனார் ஹர்ஷித்.
0
Leave a Reply