வில்வ இலையை சிவபெருமானுக்கு எப்படி சமர்ப்பிக்க வேண்டும்.
வில்வ இலையைப் பறிக்கும் போது முழுவதுமாக (3 இதழ்களும் சேர்ந்து) காம்புடன் பறிக்க வேண்டும்.
தனித்தனி இதழ்களாக பறிக்க கூடாது, பூச்சி அரித்த அல்லது கிழிந்த இலைகளை பூஜைக்குப் பயன்படுத்த கூடாது.
வில்வ இலைகள் பறித்த பின்பும் நீண்ட நாட்கள் வாடாமல் இருக்கும்.
வில்வ இலையை சமரப்பிக்கும் போது ,அதன் நரம்புகள் சிவ லிங்கத்தின் மேல் படும்படி (தலைகீழாக) வைப்பது மிகவும் விசேஷமானது.
ஒருமுறை பயன்படுத்திய வில்வ இலையை தூய்மையான நீரால் கழுவி சுத்தம் செய்து மீண்டும் பூஜைக்குப் பயன்படுத்தலாம்.
சிவபெருமானுக்கு மட்டும் இந்த விதி விலக்கு உண்டு.
0
Leave a Reply