மக்கா சோள தோசை.
தேவையான பொருட்கள் -
2 கப் காய்ந்த மக்கா சோளம்,
2கப் பச்சரிசி,
1 கப் இட்லி அரிசி,
1 கப் உளுந்து,
2 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு
,1 டீஸ்பூன் வெந்தயம்,
தேவைக்கு உப்பு,
தேவைக்குஎண்ணெய் அல்லது நெய்.
செய்முறை -
முதலில் மக்காசோளத்தை2-3 முறை நன்கு கழுவி,பிறகு அதை முழுகும் அளவு தண்ணீரில்7-8மணி நேரம். ஊற விடவும். அதேபோல் இட்லி அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு மற்றும் வெந்தயத்தை நன்றாக களைந்து தண்ணி விட்டு 4 மணி நேரம் ஊற விடவும்.
மிக்ஸி அல்லது கிரைண்டரில் அரிசி மற்றும் சோளத்தை, தனி தனியாக அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி, இரண்டு மாவும் நன்கு கலந்து விட்டு தேவையான உப்பு சேர்த்து 6-8 மணி நேரம் புளிக்க வைக்கவும்..
ஸ்டவ்வில் தோசை தவாவை வைத்து நன்கு சூடான பிறகு மாவை எடுத்து மெல்லிசான தோசையாக பரத்தி விடவும்.
ஒரு பக்கம் வெந்த பிறகு திருப்பி விட்டு சுற்றும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி பொன் நிறமானதும் எடுத்து விடவும்.. அருமையான மொறு மொறு மக்கா சோள தோசை தயார்..
தோசை மிக கிறிஸ்பியா வர ஒரு பக்கம் மட்டும் போட்டு எடுக்கவும்.
0
Leave a Reply