புது பஸ் ஸ்டாண்டிலிருத்து ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு .
போக்குவரத்து நெரிசல் காரணமாக புதுபஸ் ஸ்டாண்டிலிருத்து காந்தி கலைமன்றம் அருகே நகர் பகுதி வழியில்செல்வதற்கு பதில் சங்கரன்கோவில் ரோட்டில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் எதிர் பகுதி தென்காசி ரோட்டில் இணைப்புச் சாலை அமைக்க 2024 பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது.2.10 கி.மீட்டர் துாரத்திற்கு 10 மீட்டர் அகலத்தில் ரெண்டு பெரிய பாலம் மற்றும் 16 சிறிய நீர்வழி பாலங்களுடன் 2.10 கிலோ மீட்டர் நீளத்தில் புதிய சாலை அமைக்கப்பட்டது.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்இந்த இணைப்பு சாலையை திறந்து வைத்தார். ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் சங்கரன் கோவில்ரோட்டில் அமைந்துள்ளதால் மதுரை, தென்காசியில் இருந்து வரும் வாகனங்கள் வழித்தடங்களில் ஊருக்குள் சென்று நெரிசல் ஏற்படுத்தாத வண்ணம் மக்களுக்கு இடையூறு இன்றி புது பஸ் ஸ்டாண்டுக்கு சென்று அதே வழியில் திரும்பி செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply