25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியது.

ஜூன் 1ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கும். ஆனால் இம்முறை, ஒரு வாரத்துக்கு முன்பாகவே, அதாவது, மே, 24ம் தேதியே பருவ மழை துவங்கி உள்ளது. கடைசியாக, 2009 மே 23ல், கேர ளாவில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை துவங்கியது. தற்போது, 16 ஆண்டுகளுக்கு பின், பருவமழை முன்கூட்டியே துவங்கி உள்ளது. நம் நாட்டின் விவசாயத்துக்கு தென்மேற்கு பருவமழை முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் வாயிலாகவே, நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு அதிக மழைப் பொழிவு கிடைக்கிறது. 

இந்த பருவ மழையால், மக்கள் தொகையில், 42.3 சதவீதம் பேர் பயனடைகின்றனர். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 18.2 சதவீத பங்களிப்பை இந்த பருவமழை வழங்குகிறது.அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டவும், குடிநீர் மற்றும் மின் பயன்பாட்டின் தேவைகளை பூர்த்தி செய்யவும் தென் மேற்கு பருவமழை உதவுகிறது.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News