தங்கம் வாங்கும் யோகம் உண்டாக வெள்ளியை பூஜியுங்கள்
எந்த வீட்டில் வெள்ளி பொருட்கள் இருக்கின்றதோ, அந்த வீட்டில் நிச்சயமாக தங்கம் குவிந்து கிடக்கும்வெள்ளியை நம்முடைய வீட்டில் நிறைய வாங்கி சேர்த்துக் கொண்டே இருந்தால், அந்த வெள்ளி பொருட்கள் மற்ற உலோகமான தங்கத்தை ஈர்க்கும், தங்கத்தோடு மட்டுமல்லாமல் மற்ற உலோகத்தினால் செய்யப்பட்ட பொருட்களையு ம் நம்முடைய வீட்டில் வாங்கக்கூடிய யோகத்தை கொண்டு வந்து சேர்க்கும்,
பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து வெற்றிலையின் மேல் ,ஒரு வெள்ளி நாணயத்தை வைத்து, கொஞ்சமாக மஞ்சள்தூளை சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். ஆள்காட்டி விரலாலும் கட்டை விரலாலும் சிட்டிகை அளவு மஞ்சளை எடுத்து அந்த வெற்றிலையில் இருக்கும் வெள்ளி' பொருளின் மேலே மூன்று முறை அர்ச்சனை செய்தால் போதும், அர்ச்சனை செய்யும்போது 'எம் சுக்கிர தேவாய நமஹ' என்று மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.தொடர்ந்து செய்து வர தங்கம் வாங்கும் யோகம் உண்டாகும்.
0
Leave a Reply