அமெரிக்காவில் இந்திய வம்சாவளிப் பெண் வரலாற்றுச் சாதனை! லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயராக நித்யா ராமன் வெற்றி.
அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் புதிய வரலாறு படைத்துள்ளார்!
லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் வெற்றி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். தற்போதைய மேயர் கரேன் பாஸைத் தோற்கடித்து இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
தொடக்கத்தில்52.1 சதவீத வாக்குகளைப் பெற்றதாக வெளியான தேர்தல் முடிவுகளின்படி வெற்றி பெற்ற நித்யா ராமன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முதல் தெற்காசிய வம்சாவளி மேயர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சல்ஸை வழிநடத்தும் பொறுப்பை ஏற்கவுள்ள அவரது வெற்றி, இந்திய வம்சாவளியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க மண்ணில் இந்திய வம்சாவளிப் பெண்ணின் சாதனை...
0
Leave a Reply