அவல் குழி பணியாரம்.
தேவையான பொருட்கள்-
1 கப்அவல்,
1/2.கப்ரவை,
1/4 கப்தயிர்,
2வெங்காயம்,
2 பச்சை மிளகாய்,
1/4 டீஸ்பூன்சோடா உப்பு,
தேவையான அளவுஉப்பு,
தேவையான அளவுஎண்ணெய்,
சிறிதளவு கறிவேப்பிலை,
சிறிதளவு கொத்தமல்லி .
செய்முறை -
அவலை அலசி வடிகட்டி வைக்கவும். மிக்சியில் அவல் ,ரவை, தயிர் சேர்க்கவும்.
பின்னர் அதில் உப்பு சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவில் சோடா உப்பு வெங்காயம் சேர்த்து கலக்கவும்.
பின்னர் அதில் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலக்கவும்.
பின்னர் பணியார சட்டியில் எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும். இப்போது சுவையான அவல் குழி பணியாரம் தயார்.
0
Leave a Reply