ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியா.
ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் வங்கதேசத்தின் தாகாவில், காம்பவுண்டு கலப்பு அணிகளுக்கான போட்டி நடந்தது.இந்தியாவின் அபிஷேக், தீப்ஷிஹா இடம் பெற்ற அணி காலிறுதியில் 159–155 என வியட்நாமை வென்றது. அடுத்து நடந்த அரையிறுதி யில் இந்தியா, கஜகஸ்தான் அணிகள் மோதின.இந்திய அணி 156-153 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.
இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. 'ரீகர்வ்' கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அன்ஷிகா குமாரி, யாஷ் தீப் சஞ்சய் ஜோடி, 0–6 என சீன தைபே ஜோடி யிடம்தோல்வியடைந்தது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நாளை தென் கொரியாவை சந்திக்க உள்ளது.
0
Leave a Reply