உடனுக்குடன் காபி கலக்க....
பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் வரும், விருந்தாளிகளுக்காக, அடிக்கடி காபி கலக்க நேரிடும். அப்போது பாலை திரும்ப திரும்ப சுடவைத்து காபி கலக்கினால், பால் சீக்கிரம் சுண்டிவிடும். இரண்டு கேஸ் அடுப்புகளிலும் இரண்டு, பெரிய பாத்திரங்களில் வெந்நீர் கொதிக்க வைத்து அதில் ஒன்றில் பாலும், மற்றொன்றில் காபி டிக்காஷன் உள்ள சிறிய பாத்திரத்தை வைத்து, அடுப்பை, 'சிம்'மில் வைத்து விடவும். பாலும், டிகாஷனும் எப்போதும் சூடாக இருக்கும். உடனுக்குடன் காபி கலக்கலாம்.
பொரித்த ஒரு அப்பளத்தை நொறுக்கி, இரண்டு டீஸ்பூன் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, புளி, ஒரு பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்தால் சூப்பரான அப்பளத் துவையல் ரெடி.
சாதம் வடிக்கும் போது சற்று குழைந்து விட்டது போன்று தெரிந்தால் உடனே சிறிதளவு நல்லெண் ணெய்யை சேர்த்தால் மேலும் குழையாமல் இருக்கும்.
துவரம் பருப்பை வேக வைக்கும் போது ஒரு துண்டு தேங்காய் போட்டு வேக வைத்தால் விரைவில் வெந்து விடும்.
மோர்க்குழம்பு, கூட்டு ஆகியவற் றிக்கு தேங்காய் எண்ணெய்யில் தாளித்து கொட்டினால், மணமாக இருக்கும்.
0
Leave a Reply