கதை நாயகனாக எம்.எஸ். பாஸ்கர்.
தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ். பாஸ்கர் கதை நாயகனாக நடிக்கும் புதிய படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தை அரவிந்தராஜன் இயக்குகிறார்.
படம் குறித்து இயக்குனர் கூறுகையில், “ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் விசாரணைக்காக செல்லும் இரண்டு காவல் அதிகாரிகளுக்கு, அங்கு நிகழும் அமானுஷ்ய சம்பவங்களால் ஏற்படும் பிரச்னைகள்தான் கதை. இதில் காவல்துறை அதிகாரியாக எம்.எஸ். பாஸ்கர் நடிக்கிறார்” என்றார்.
0
Leave a Reply