காய்கறி சட்னி
தேவையான பொருட்கள் - கேரட் 1, பீன்ஸ் 6, நடுத்தர அளவு கத்தரிக்காய் 3, கோஸ் 1 துண்டு, சௌசௌ 1 துண்டு, சிறிய முள்ளங்கி 1, பிஞ்சான பச்சை மொச்சைக்கொட்டை கால் கப், அவரை 5, பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, இஞ்சி 1 துண்டு, புளி சிறு எலுமிச்சை அளவு, தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், பச்சைமிளகாய் 6, கடுகு 1 டீஸ்பூன், உளுந்து 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, பெருங்காயம் அரை டீஸ்பூன், எண்ணெய் 3 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு.
செய்முறை: - வெங்காயம், தக்காளி, காய்கறிகளைப் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறுங்கள். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து, மிளகாய் வற்றலைத் தாளித்துப் பிறகு வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் காய்கறிகள், இஞ்சி, தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து மிதமான - தீயில் காய்கள் வேகும்வரை வதக்குங்கள். வதங்கியதும் தேங்காய், பெருங்காயம், புளி, உப்பு, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்குங்கள். ஆறியதும் நைஸாக அரைத்தெடுங்கள். சத்துக்கள் நிறைந்த இந்த காய்கறி சட்னியை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும்.
0
Leave a Reply