25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சேதமடைந்த ராஜபாளையம் புதுக்குளம் கண்மாய் விவசாயிகள், விளைபொருட்களை கொண்டு  செல்லும் பாதை. 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சேதமடைந்த ராஜபாளையம் புதுக்குளம் கண்மாய் விவசாயிகள், விளைபொருட்களை கொண்டு  செல்லும் பாதை. 

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் அய்யனார்கோயில் ஆற்றின் நீர்வரத்து பெறும் முதல் கண்மாயாக முடங்கியாறு ரோட்டின் அருகே புதுக்குளம் கண்மாய் அமைந்துள்ளது.சுமார் 200 ஏக்கர் பாசன வசதி உள்ள இக்கண்மாய் நிறைந்து பிரண்டை குளம், புளியங்குளம், கொண்டநேரி  உள்ளிட்ட நகரை ஓட்டிய கண்மாய்களும் தொடர்ச்சியாக நீர்வரத்து பெற்று வருகின்றன.

இந்நிலையில் கண்மாய் கரை வழியாக இரண்டு கிலோமீட்டர்தூரம் உள்ள விளை நிலங்களுக்கு செல்லும் பாதை முறையாக வசதி செய்யப்பட வில்லை. கரடு முரடாகவும் உரம், விளை பொருட்கள், இடுபொருட்கள் கொண்டு செல்ல டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்லவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அகலம் குறைவாக

உள்ளதால் ,மழைக்காலங்களில் சகதியில் சிக்கி விவசாயிகள் சிரமத்திற்கு உள் ளாகின்றனர்.இதுவரை பாதையை சீரமைத்து தரவில்லை. விவசாயிகள் தேவை கருதி தார் சாலை அமைத்து தர விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News