திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு புதிய வாய்ப்பு: விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம் அறிவிப்பு!
தென் தமிழகத்தில் விண்வெளித் துறை மற்றும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குலசேகரப்பட்டினம் ஏவுதளம் முக்கியத்துவம்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள புதிய விண்வெளி ஏவுதளத்தின் புவியியல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, IN-SPACe அமைப்புடன் இணைந்து ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேம்பட்ட விண்கலப் பொதுத் தொழில்நுட்ப வசதி மையம் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்க வாய்ப்பு.
இந்தத் திட்டத்தின் மூலம் தனியார் விண்வெளி நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கான ஆராய்ச்சி, பரிசோதனை, உற்பத்தி உள்ளிட்ட வசதிகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தென் மாவட்டங்களில் விண்வெளித் தொழில்நுட்பம் சார்ந்த புதிய நிறுவனங்கள் உருவாகவும், முதலீடுகள் அதிகரிக்கவும், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply