அட்லாண்டா திரைப்பட விழாவில் விருது வென்ற ‘என்ன விலை’.
சஜீவ் பாழூர் இயக்கத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘என்ன விலை’. ராமேஸ்வரம் பின்னணியில், ஒரு மீனவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றுள்ளது. இதுகுறித்து ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி கூறுகையில், “இது பெருமையான தருணம். இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது பாக்கியம்” என்றார்.
0
Leave a Reply